விழுப்புரத்தில் பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்

பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்

Update: 2024-12-12 13:14 GMT
விழுப்புரம் வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி நடைபெற்றது.வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான பலனை தர கூடிய 'கைசிக ஏகாதசி'உற்சவம், விழுப்புரம் வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 6:00 மணியளவில், வைகுண்டவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளி, அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News