பாம்பு கடித்து பெண் பலி
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பாம்பு கடித்து பெண் பலி.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி தெய்வம் நகரில் குடியிருக்கும் கழுவனின் மனைவி பாண்டீஸ்வரி (40) என்பவர் நேற்று தனது வீட்டின் முன்பு தேங்கி இருந்த நீரை அப்புறப்படுத்தும் போது பாம்பு கடிதத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அவரது கணவர் நேற்று ( டிச.14) செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.