குடோனில் பற்றி எறிந்த தீ சேதாரம் அதிகமாவதற்கு முன் விரைந்து சென்று அணைத்த தீயணைப்பு படையினர்!*

குடோனில் பற்றி எறிந்த தீ சேதாரம் அதிகமாவதற்கு முன் விரைந்து சென்று அணைத்த தீயணைப்பு படையினர்!*;

Update: 2024-12-16 02:41 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குடோனில் பற்றி எறிந்த தீ சேதாரம் அதிகமாவதற்கு முன் விரைந்து சென்று அணைத்த தீயணைப்பு படையினர்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் மண் விளக்கு மண்பாண்டங்கள் மற்றும் மருத்துவ பேண்டேஜ் துணி வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீர் தீ விபத்து சேதாரம் அதிகமாக அதற்கு முன் விரைந்து சென்று தீயை அணைத்த தீயணைப்பு படையினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி செல்லும் சாலையில் உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் சுப்புலட்சுமி பிச்சையா என்கிற வயது முதிர்ந்த தம்பதியினர் கைவினைப் பொருட்களான விளக்கு பானை உட்பட பல்வேறு கைவினைப் பொருட்களை செய்து விற்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மழைக்காலம் என்பதனால் கைவினைப் பொருட்கள் செய்ய முடியாத சூழ்நிலையில் கோடை காலத்திலேயே குளிர்காலத்திற்கான கைவினைப் பொருட்களை செய்து அவரது வீட்டின் அருகே உள்ள குடோனில் பாதுகாப்பாக வைத்திருப்பது வழக்கம். மேலும் அதே குடோனில் மருத்துவ கழிவு பேண்ட் துணிகளை சொந்த பயன்பாட்டிற்காக வாங்கி வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில் இன்று இரவு திடீரென குடோனில் தீ மலமலவன பற்றி எறிந்து உள்ளது இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக குடோன் உரிமையாளருக்கும் ராஜபாளையம் தீயணைப்புத் துறையினர்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மேலும் கைவினைப் பொருட்கள் எரிந்து நாசமாவதை தடுக்கும் பொருட்டு பற்றிய அறிந்த தீயீனை முற்றிலுமாக அணைத்தனர். இதன் காரணமாக அதிக சேதம் ஏற்பட இருந்த தீ விபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டது. மேலும் மின் கசிவு மூலம் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதனால் தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News