செல்போன் டவர் மின்சாதன பொருட்களை கண்டுபிடித்து தர கோரி தனியார் நிறுவன ஊழியர் போலீசில் புகார்

செல்போன் டவர் மின்சாதன பொருட்களை கண்டுபிடித்து தர கூறி தனியார் நிறுவனம் ஊழியர் நீதிமன்றம் மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார்.;

Update: 2024-12-17 14:08 GMT
அரியலூர், டிச.18- செல்போன் டவர் இயங்கும் அறையில் இருந்து காணாமல் போன பேட்டரி உள்ளிட்ட தளவாடன் மின்சாதன பொருட்களை கண்டுபிடித்து தரக் கோரி தனியார் நிறுவன ஊழியர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதி மன்றத்திலிருந்து வந்த மனுவை வைத்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிக்குளம் கிராமத்தில் சுந்தரமூர்த்தி மகன் முருகதாஸ் என்பவரது வீட்டு மனையில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று செல்போன் டவர் அமைத்து இயக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் டவர் இயக்கத்தை செல்போன் டவர் நிறுவன ஊழியர் சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ரவிக்குமார் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் 2023 மார்ச் 14-ந்தேதி அன்று மீண்டும் வந்து பார்த்தபோது அந்த அறையில் இருந்த பேட்டரி ஸ்டெபிலைசர் உள்ளிட்ட பல்வேறு மின் சாதன உபகரணங்கள் காணாமல் உனது கண்டு அதிர்ச்சடைந்தார். மேலும் இதுகுறித்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் இருந்து வரப்பெற்ற மனு மீது வழக்கு பதிவு செய்து காணாமல் போன மின்சாதன பொருட்களை ஜெயங்கொண்டம் போலீசார் தேடி விசாரித்து வருகின்றனர்.

Similar News