தர்மபுரியில் மார்கழி மாத பஜனை துவக்கம்
மேல் பூரிக்கல் கிராமத்தில் பாண்டுரங்கன் பஜனை குழுவின் சார்பில் மார்கழி மாத பெருமாள் பஜனை துவக்கம்,
தமிழகத்தில் மார்கழி மாதத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பஜனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும் அதிகாலை முதலே மார்கழி மாத பஜனை பாடல்களை பாடி வீதி வீதியாக சென்று பெருமாள் புகழை பரப்புவது இந்த பஜனையின் முக்கிய வழக்கமாகும். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட மானியதஅள்ளி ஊராட்சியில் மேல்பூரிக்கல் கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பாண்டுரங்கன் பூஜை பஜனை குழு பஜனை பாடி செல்வது வழக்கம். அதன் படி மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு இன்று காலை 7 மணி அளவில் பாண்டுரங்கன் பஜனை குழுவினர் மார்கழி மாத பஜனை மற்றும் திருப்பாவை திருவெம்பாவை உள்ளிட்ட பாடல்களை பாடி கிராமம் முழுவதும் சென்றனர். அவர்களை எங்கள் மலர் தூவி வரவேற்றனர்.