கோபிச்செட்டிப்பாளைம் அருகேமது விற்ற தாய்- மகனுக்கு வலைவீச்சு
கோபிச்செட்டிப்பாளைம் அருகேமது விற்ற தாய்- மகனுக்கு வலைவீச்சு
கோபிச்செட்டிப்பாளைம் அருகேமது விற்ற தாய்- மகனுக்கு வலைவீச்சு கோபியை அடுத்த உக்கரம் சமன் நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் உக்கரம் பகுதிக்கு விரைந்து சென்று குறிப்பிட்ட ஒரு வீட்டை சோதனையிட்டனர் அப்போதுவீட்டில் 8 மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்றது ரேவதி மற்றும் அவருடைய மகன் கார்த்திக் என்பதும், போலீசாரை கண்ட தும் அவர்கள் தப்பி ஓடியதும், தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவான தாய், மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.