தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மரகதம் (வயது 48) விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது கணவர் மதியழகன் இறந்து விட்டார். தனது கூரை வீட்டில் மாற்றுத்திறனாளிகளான மகன்கள் மாதவன் (26), மகாதேவன் (24), மற்றும் மகள் மகாதேவி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வீட்டின் மண் சுவர் திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேரும் காயமடைந்தனர்.அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.