பாதாள சாக்கடை அமைக்கும் பூமி பூஜையில் எம்எல்ஏ.
மதுரையில் புதிய பாதாள சாக்கடை அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் எம்எல்ஏ கலந்து கொண்டார்.
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 29 வது வார்டு செல்லூர் ஜான்சிராணிபுரத்தில் பழைய பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி புதிதாக குழாய் பதிக்கும் பணிக்கு தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் அவர்கள் தலைமையில் இன்று (டிச.18) பூமி பூஜை நடைபெற்றது. உடன் மாமன்ற உறுப்பினர் லோகமணி ரஞ்சித் குமார், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவி பொறியாளர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டனர்.