ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பள்ளி மாணவன் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்..
ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பள்ளி மாணவன் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் உமா நேற்று காலை முதல் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.இந்த நிலையில் ராசிபுரம் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட போது விவசாயி ஒருவர் தான் இயற்கை முறையில் விவசாயம் செய்து விற்பனை செய்வதாகவும், அதற்கான உரிய விலை கிடைப்பதில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கூறிய போது அதிகாரி கரராக பேசியதால் ஆட்சியர் அவரிடம் ஏன் சண்டை போடுகிறீர்கள் அவர் தனது குறைகளை கூறுவதாகும் என அதிகாரியை கடித்துக் கொண்டார். அதனை தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகளை பார்வையிட்டார். தொடர்ந்து தொப்பப்பட்டி அருகே ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது அப்போது பள்ளி மாணவர் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற நிலையில் அப்போது மாவட்ட ஆட்சியர் உமா வாகனத்தை தடுத்து நிறுத்தி மாணவரிடம் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு உனக்கு உரிமம் உள்ளதா? என மாணவர் இடம் கேட்டறிந்து வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் தான் ஆர் டி ஓக்கு தொலைபேசி மூலம் அழைத்து மாணவனின் தந்தை மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க உத்தரவிடுவதாக கூறினார். ஆனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு நிலையில் மற்ற வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளும் மாற்று பாதையை நோக்கி திரும்பி சென்றது குறிப்பிடத்தக்கது.