கடையநல்லூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம் தலைமையில் பேரு நீயே கொடியை சேர்த்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணி கல்லூரியில் இருந்து முக்கிய வீதி வழியாக புறப்பட்டு சென்று மீண்டும் கல்லூரியில் சென்றடைந்தனர். இந்தப் பேரணியில் ஆங்கில துறை தலைவர் ராம் சங்கர் போதைப்பொருள் எதிர்ப்பு மன்ற உறுப்பினர், கணிதவியல் துறை பேராசிரியர் ஆறுமுகம் கடையநல்லூர் எஸ்ஐ ராமச்சந்திரன உள்ளிட்ட ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகளும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.