பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெற வேளாண் அதிகாரிகள் அழைப்பு
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் 2024-25ம் ஆண்டு ராபி பருவத்தில், பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேளாண் அதிகாரி அறிவிப்பு
இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் மரிய ரவி ஜெயகுமார் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தர்மபுரி மாவட்டத் தில் 2024 -25ம் ஆண்டு ராபி பருவத்தில் பருவ மழையில் மகசூல் இழப்புகளை தவிர்த்திட, பயிர் காப்பீடு செய்து பயன் பெற வேண்டும். நெல்-3 (நவரை) சாகுபடி செய்துள்ள விவசாயிகள். தர்மபுரி வட்டாரத்தில் தர்மபுரி, கிருஷ்ணாபுரம், நல்லம்பள்ளி வட்டா ரத்தில் இண்டூர், காரிமங்கலம் வட்டாரத்தில் வெள்ளிச்சந்தை, பெரியனஅள்ளி, பாலக்கோடு வட்டாரத்தில் பாலக்கோடு, புலிக்கரை, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வட்டாரத்தில் பெரும் பாலை, பாப்பாரப்பட்டி, அரூர் வட்டாரத்தில் அரூர் தீர்த்தமலை, தென் கரைகோட்டை மொரப்பூர் வட்டாரத்தில் மொரப்பூர், பொம்மிடி, கம்பைநல்லூர், மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி குறுவட்டாரங்கள் வாரியாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெல் -3 (நவரை) பயிர் ஏக்கருக்கு 556.26 யை. 2025 ஜனவரி 31ம் தேதிக் குள் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். இதேபோல், ராகி ஏக்கருக்கு 228ம், மக்காச் சோளத்திற்கு 392.83ம், நிலக்கடலைக்கு 319.36ம் காப்பீடாகடிசம்பர் 30ம் தேதிக்குள் செலுத்தி பதி வுசெய்துகொள்ளவேண் டும். மேலும், கரும்பு பயி ருக்கு 3025 மார்ச் 31ம் தேதிக்குள் ஏக்கருக்கு 12598.90யை செலுத்தி காப்பீடு செய்து கொள் ளலாம் மேலும் விவரங் களுக்கு வட்டார அளவில் உள்ள வேளாண், தோட்டக்கலைத்துறை. வங்கிகள், பொதுச்சேவை மையங்கள் மற்றும் காப்பீடு நிறுவன அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். விவசாயிகள் காப்பீடு செய்யும்போது, தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர். புல எண்கள் பரப்புகள் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா. என்பதை சரிபார்த்து காப்பீடு செய்த பின் அதற்கான ரசீதை பெற் றுக்கொள்ள வேண்டும். எதிர்பாராத இயற்கை சிற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்து விவசயிகள் அனைவரும் பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்