தொடரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கு
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் திமுக அரசு வழக்கை திரும்ப பெற்றும் மயிலாடுதுறையில் மட்டும் தொடர்வதாக குற்றச்சாட்டு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழையபேருந்து நிலையம் அருகில் கடந்த 4-1-2020 அன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மாநில துணைத் தலைவர் . முசாஹுதீன், சீர்காழிநகர துணைத் தனவர் முகம்மது யூனுஸ் நகர துணைச் செயலாளர் முகம்மது இக்பால் , தந்தை பெரியார் தி.க கட்சியின் பெரியார்செல்வம், ஆகியோர் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், ஆஜராகினர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடியவர்கள்மீது உள்ள வழக்குகளை தமிழக அரசு ஏற்கனவே திரும்பப் பெற்றுள்ளது. ஆனால் ஒரு சில ஊர்களில் வழக்குகள் திரும்பப் பெறாததால் இன்று வரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாநிலத் துணைத் தலைவர் ஓஎம்ஏ. முசாகுஹுதீன் தெரிவிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய வழக்கில் தமிழக முழுவதும் ஒட்டுமொத்தமாக அரசு திரும்பப் பெற்றதாக அறிவித்தபிறகு இதுபோன்று விடுபட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை, இந்த வழக்கில் 11 பேர் உள்ளனர், இதில் ஹைதர்அலி, மல்லை சத்தியா மற்றும் 7வது நபராக சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் மீதும் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது, அவர்களுக்கு சீர்காழி போலீசார் சம்மனும் அனுப்பவில்லை அவர்கள் இதுவரை நீதிமன்றத்திற்கும் வரவில்லை, பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன்மீதும் இதுபோன்ற வழக்குகள் உள்ளன. உடனடியாக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தள்ளுபடி செய்யவேண்டும் என்றார்