தாய்நாடு நதிநீர் இணைப்பு சங்க மாநில கவுரவ தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவர் விவேக் தலைமையில் நலத்திட்ட உதவி
கரூர் மாவட்டம் குளித்தலையில் தாய்நாடு நதிநீர் இணைப்பு சங்க மாநில கவுரவ தலைவர் சூரியனூர் சக்திவேல் பிறந்த நாளை முன்னிட்டு கல்விக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குளித்தலையில் உள்ள பெரியபாலம், மணத்தட்டை, அண்ணா நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் அமரும் சேர்கள், தட்டுகள், டம்ளர்கள், பாய் விரிப்பான்கள் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மணத்தட்டை அரசு தொடக்கப் பள்ளியில் ஆவணங்கள் வைப்பதற்காக 6 அடி பீரோவை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சக்திவேல் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் கரூர் மாவட்ட தலைவர் மணத்தட்டை விவேக் செய்திருந்தார். இந்நிகழ்வில் பெட்டவாய்த்தலை பழனி, கருப்பத்தூர் குமார், சீகம்பட்டி பாலா, அனலை சங்கர், நச்சலூர் மூர்த்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.