கடையநல்லூர் கருப்பா நதியில் 7.5 மில்லி மீட்டர் மழை பதிவு
கருப்பா நதியில் 7.5 மில்லி மீட்டர் மழை பதிவு
தென்காசி மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் 3 தினங்கள் தொடர்ந்து கன மழை பெய்தது. இதை தொடர்ந்து 2 நாட்கள் வெயில் அடிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று தென்காசி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக கடையநல்லூரில் உள்ள கருப்பா நதி அணை பகுதியில் 7.5 மில்லி மீட்டர் மழை பதிவாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.