ஊராட்சி மன்ற தலைவிக்காக நீதிமன்றத்தில் வாதாடிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர்
சிவகங்கையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மனைவி ஊராட்சிமன்ற தலைவராக பதவியேற்க ஆட்சியர் அனுமதி. இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவராக காங்கிரஸ் எம்.எல்.ஏ மாங்குடியின் மனைவி தேவி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது தவறு என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் பிரியதர்ஷினியின் வெற்றி செல்லும் என தீர்ப்பு வழங்கியது அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரியதர்ஷினி பதவி ஏற்றார் இந்நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமே ஆஜரான நிலையில் மங்குடி மனைவி தேவி வெற்றிபெற்றதே செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வாங்கியுள்ளது. தீர்ப்பு நகலை சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித்திடம் மாங்குடி மனைவி தேவி வழங்கிய நிலையில் ஆட்சியர் பதவியேற்க அனுமதி வழங்கினார். ஆட்சியர் அலுவலக வாயிலிலேயே இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்.