வாக்காளர் பட்டியல் முகாம் குறித்து ஆய்வு நடத்திய பார்வையாளர்
வாக்காளர் பட்டியல் முகாம் குறித்து ஆய்வு நடத்திய பார்வையாளர்
தமிழகம் முழுவதும் அண்மையில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் முகாம் நடைபெற்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இந்த முகாமில் முறையாக வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனரா, பெயர் நீக்கம், திருத்தம் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா என மதுரை ராமநாதபுரம் விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் பார்வையாளர்(ROLL OBSERVER) ஹனிஷ் சாப்ரா(IAS) இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி, அருப்புக்கோட்டை ராஜூவ் நகர், வேலாயுதபுரம் மற்றும் பாலவநத்தம் ஆகிய பகுதிகளில் ஹனிஷ் சாப்ரா(IAS) நேரடியாக வாக்காளர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆவணங்களை சரி சரி பார்த்து முறையான விதிகளின்படி பேர் சேர்க்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதிய வாக்காளர் பெயர் சேர்தலின் போது வழங்கப்பட்ட ஆவணங்கள் சரியாக உள்ளதா எனவும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு, வட்டாட்சியர் செந்தில்வேல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.