சங்கரன்கோவில் அருகே சேர் ஆட்டோ கவிழ்ந்து பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம்
சேர் ஆட்டோ கவிழ்ந்து பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிகோனேந்தல் பகுதியைச் சேர்ந்த சுமார் 10 பெண்கள் 100 நாள் வேலை திட்டத்திற்காக ஒரு ஷேர் ஆட்டோ மூலம் வடக்கு அச்சம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று குறுக்கிடவே இதனால் நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்ததில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். உடனே பெண்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைத்து பெண்களையும் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 2 பெண்கள் தற்போது மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.