ஈரோடு ஆணையர் உத்தரவு

ஈரோடு மாநகராட்சியில் பருவமழையையொட்டி 24 மணி நேரமும் அனைத்து நிலை பணியாளர்களும் தயார் நிலையில் இருக்க ஆணையர் உத்தரவு

Update: 2024-12-20 08:05 GMT
ஈரோடு மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ள பாதிப்புகளை தடுக்க அனைத்து நிலை பணியாளர்களும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க ஆணையர் மனிஷ் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வட கிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் மனிஷ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், மாநகரில் கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள், தாழ்வான பகுதிகளை கண்காணித்து, அங்கு மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரில் உள்ள அனைத்து ஓடைகள், சாக்கடைகள் தூர்வாரி, மழை நீர் தங்கு தடையின்றி செல்ல வழி வகை செய்ய வேண்டும். மேலும், 4 மண்டலங்களிலும் பொறியாளர், சுகாதார ஆய்வாளர், மேற்பார்வையாளர், தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் இரவு நேர பணியில், ஜேசிபி மற்றும் மீட்பு வாகனங்கள், பேரிடர் உபகரணங்கள் போன்றவற்றுடன் அனைத்து நிலை அலுவலர்களும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார், பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ===

Similar News