நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாமக்கல் முட்டை.!

ஓமன் அரசிடம் உடனே பேசி பிரச்சினையை தீர்க்க மாதேஸ்வரன் MP வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தல்.

Update: 2024-12-20 07:38 GMT
இன்று டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் MP சமீபத்தில் ஓமன் அரசு இந்திய முட்டைகளுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, குறைந்தபட்ச முட்டையின் எடை 60 கிராம் இருக்க வேண்டும், அதேசமயம் நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டை 52 கிராம் உள்ளது, இதனால் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய முட்டைகள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு, தற்போது நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓமன் அரசிடம் இந்த விவகாரத்தை எடுத்துரைத்து, நாமக்கல் கோழிப்பண்ணையாளர்களுக்கு உதவும் வகையில் இப்பிரச்சினையை தூதரக ரீதியாக தீர்க்குமாறு கோரிக்கை விடுத்தார்.

Similar News