பனப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் விழிப்புணர்வு!

போலீசார் மக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு

Update: 2024-12-20 05:35 GMT
பாணாவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களான ரெயில்வே மேம்பாலம், பஸ் நிறுத்தம், வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், முனீர்பாஷா மற்றும் போலீசார் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வெளியூர்களுக்கு செல்லும் போது காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பூட்டப்பட்ட வீடுகளில் நகைகள் மற்றும் பணத்தை வைக்காமல் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க வேண்டும். பயணங்களின்போது அறிமுகம் இல்லாதவர்கள் தரும் உணவு பண்டங்களை உண்ண வேண்டாம். வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களுக்கு வீட்டை வாட கைக்கு விட வேண்டாம். தனிமையில் இருக்கும் முதியோர், பெண்கள் போலீஸ் நிலையத்தின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Similar News