சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமித்ஷாவை கண்டித்து சிபிஎம் ,மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.
சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர், டிச.20- சட்ட மேதை அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவர் ஜபருல்லா ஆகியோர் தலைமையில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், துரைசாமி, கந்தசாமி ஆகியோர் கண்டன உரை நிகத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு , அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆண்டிமடம் வட்ட செயலாளர் வேல்முருகன், செந்துறை வட்ட செயலாளர் அர்ஜுனன், திருமானூர் ஒன்றிய செயலாளர் சாமிதுரை, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட அமைப்பாளர் சபியுல்லா, மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் சையத் சல்மான், மாவட்ட அமைப்பாளர் பர்கத், மாணவர் அணி மண்டல செயலாளர் ஷக்கில் அகமது, சமூக நீதி மாணவரமைப்பு மாவட்ட செயலாளர் சாகுல்அமீது ஆகியோர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் மைதீன்சா, அருணாச்சலம், சரோஜினி, ஏசுதாஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.