நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா!

சோளிங்கர் பராமரிப்பு பணி மேற்கொள்ள நாளை மின்தடை

Update: 2024-12-20 05:37 GMT
சோளிங்கர் மற்றும் காவேரிப்பாக்கம் துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோளிங்கர், கல்பட்டு, சோமசமுத்திரம், பாண்டியநல்லூர், கரிக்கல், அரியூர், வேங்குப்பட்டு, ஐய்பேடு, எரும்பி, தாடூர், தாளிக்கால், பாணாவரம், போளிப்பாக்கம், பழையபாளையம், கீழ்பாலபுரம், ஒச்சேரி, வாலாஜா, ஒழுகூர், கரிவேடு, வேகாமங்கலம், மாமண்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும்.இந்த தகவலை செயற்பொறியாளர் ஆர்.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Similar News