சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு போக்குவரத்து மாற்றம்

சபரிமலை

Update: 2024-12-20 06:00 GMT
சபரிமலைக்கு பக்தர்கள் தேனி, கம்பம், குமுளி வழியாக செல்வது வழக்கம். குமுளி மலைப்பாதையில் நெரிசல் ஏற்படுவதால் பல ஆண்டுக்கு முன் ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டது. கோயில் செல்லும் வாகனங்கள் கம்பம் மெட்டு, சேத்து குழி, ஆமையாறு, புளியன் மலை, கட்டப்பனை, ஏலப்பாறை, வழியாக சபரிமலை செல்வர். தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு எளிதாக சென்று வருவதற்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பக்தர்களின் பாதுகாப்பு பயணத்தை கருத்தில் கொண்டு 20.12.2024 முதல் 15.01.25 வரை சபரிமலைக்கு செல்வதற்கு கம்பம் பட்டு வழித்தடமாகவும் திரும்புவதற்கு குமுளி வழித்தடமாகவும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Similar News