வழக்கு பதிவு
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 23 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு;
ஈரோடு மாநகரில் தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த நவம்பர் இறுதிவரை வாகனம் தணிக்கை மேற்கொண்டு போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக மொத்தம் 23 ஆயிரத்து 220 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:- ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டியது தொடர்பாக 12,308 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றது தொடர்பாக 1, 262, சீட் பெல்ட் அணியாமல் சென்றது தொடர்பாக 1,314 வழக்குகளும், டிரைவிங் லைசென்ஸ் இன்றி தொடர்பாக 426 வழக்குகளும், இன்சூரன்ஸ் இல்லாமல் சென்றது தொடர்பாக 854 வழக்குகளும், குடிபோதையில் வாகன இயக்கியதாக 752 வழக்குகளும், சிக்னலில் நிற்காமல் சென்றது தொடர்பாக 780 வழக்குகளும், மொபைல் பேசி படி சென்றதாக 464 வழக்குகளும், அதிவேகம் சென்றதாக 75 வழக்கங்களும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது தொடர்பாக 122 வழக்குகளும், அதிக பாரம் ஏற்றி சென்றது தொடர்பாக நான்கு வழக்குகளும், ஆர் சி புத்தகம் இன்றி சென்றது தொடர்பாக 597 வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.57 லட்சத்து 10 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட விதிமுறை மீறல் வழக்கு எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகம் உள்ளது.