அமித்ஷாவை கண்டித்து ரயில் மறியல் செய்ய முயன்ற வி.சி.க.வினர் கைது - காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ...*

அமித்ஷாவை கண்டித்து ரயில் மறியல் செய்ய முயன்ற வி.சி.க.வினர் கைது - காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ...*;

Update: 2024-12-20 07:25 GMT
விருதுநகரில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ரயில் மறியல் செய்ய முயன்ற வி.சி.க.வினர் கைது - காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ... அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் பதவி வழங்க கோரியும் ரயில் மறியல் செய்ய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 40 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் அரசியல் சாசனம் 75 ஆண்டுகள் நிறைவடைந்தது.இதைக்கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நாட்களாக சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் முடிவில் மாநிலங்களவையில் பேசிய அமீத்ஷா " அம்பேத்கர், அம்பேத்கர்... என கூறுவது இப்போது 'பேஷன்' ஆகி விட்டது. கடவுளின் பெயரை இப்படி கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்' என்றார். அமித்ஷாவின் இந்த கருத்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமித்ஷாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ரயில் மறியல் செய்ய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடன் ரயில் நிலைய நுழைவாயில் அருகே அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர் விசிக விருதுநகர் மாவட்டச் செயலாளர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 40க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Similar News