சாலையில் ஓடும் தண்ணீர் பொதுமக்கள் அவதி
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கண்மாய் நிரம்பி தண்ணீா் வெளியேறி சாலையை மூழ்கடித்துச் செல்வதால் கிராம மக்கள் அவதிப்பட்டனா்.;
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலநெட்டூா் கண்மாய் நிரம்பி இங்கிருந்து வெளியேறும் தண்ணீா் அருகேயுள்ள காக்குடி கண்மாய் நிரம்பியது. இதையடுத்து, கழுங்கு வழியாக தண்ணீா் வெளியேறுகிறது. இந்த தண்ணீா் தெற்குசந்தனூா் ஊராட்சி காக்குடி- தேவரேந்தல் கிராமத்துக்குச் செல்லும் சாலையை மூழ்கடித்துச் செல்வதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத் தலைவி லதா, ஒன்றியக் குழு உறுப்பினா் அண்ணாதுரை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மண்டல துணை வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா் உள்ளிட்டோா் தேவரேந்தல் கிராமத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். அப்போது, இந்தப் பகுதியில் பாலம் அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.