விழுப்புரத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா மாணவர்கள் பேரணி

தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா மாணவர்கள் பேரணி;

Update: 2024-12-21 07:22 GMT
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஆட்சி மொழி சட்ட வார விழா முன்னிட்டு கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.கலெக்டர் பழனி கொடி யசைத்து துவக்கி வைத்தார். தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட கடந்த 27.12.1956ம் நாளை, நினைவு கூரும் வகையில், தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் தனித்துவம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.டி.ஆர்.ஓ., அரிதாஸ், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா பங்கேற்றனர்.

Similar News