கழுவந்தோண்டி கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-12-21 15:01 GMT
அரியலூர் டிச.21- ஜெயங்கொண்டம் அருகே குழாய் உடைப்பால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வீணாவதால் குடிநீர்தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்படும். ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், இலையூர் ,வாரியங்காவல்,குவாகம் போன்ற ஊர்களுக்கு குடிநீருக்கு பிரதானமாக விளங்குவது தா.பழுர் ஒன்றியத்தில் உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத இரும்பு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ப்பட்டு வருகின்றது. கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் மிகபெரிய ஆழ்குழாய் அமைத்து செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் பழைய கொள்ளிடம் கூட்டு குடிநீர்திட்டம் மற்றும் புதியகொள்ளிடம் கூட்டுகுடிநீர்திட்டம் என இரண்டு திட்டத்தில் குடிநீர் அனுப்பி வருகின்றனர். ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு புதிய கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர்விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு மழைகாலங்களில் 10ஆயிரம் முதல் 22ஆயிரம் லிட்டர் அளவில் விநியோகம் செய்யப்பட்டது. கோடைகாலங்களில் நீர்மட்டம் குறைந்ததால் மின்சாரம் ஆழ்குழாய் கிணறு நிரம்ப பம்ப் செய்யப்பட்டு குடிநீர் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. இந்நிலையில் போதியஅளவில் குடிநீர் கோடாலிகருப்பூரிலிருந்து நீர் அனுப்பி வைத்து குடிநீரானது ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் கும்பகோணம் சாலையில் கிழக்கு புறமாக அமைக்கப்பட்டிருக்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வெளியேறி வருகிறது. இந்தக் குடிநீரானது சாலையை வீணாக்கும் பச்சத்தில் சாலையில் தண்ணீர் ஓடுவது போல் சாலையை மண்வெட்டியால் வெட்டி தண்ணீரை சாலை ஓரம் ஏரியில் கலக்கும் அளவிற்கு வெட்டி விடுகின்றனர். அப்படி அனுப்பிவைக்கபடும் குடிநீர் பராமரிப்பு இல்லாததால் குடிநீர்குழாயில் உடைப்பு ஏற்பட்டு வழியிலேயே பாதி நீர் வெளியேறி வீணாகின்றது. இதனால் நெடுஞ்சாலைகளில் ஓரமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிகொண்டுள்ளது. இதனை கூட்டுகுடிநீர்திட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை, குடீநீர் வீணாவதை நிறுத்தி இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், குவாகம்,வாரியங்காவல் பகுதி பொதுமக்களின் குடிநீர்தட்டுபாட்டை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிநீர் வீணாவதோடு மட்டுமல்லாமல் இவ்வாறு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படும் குடிநீரை ஏற்றுவதற்காக மின்சாரமும் வீணாகி வருகிறது அரசு பல்வேறு வகைகளை மின்சார சிக்கனம் தண்ணீர் சிக்கனம் என பல்வேறு வகைகளில் கூறியும் இது போன்ற பராமரிப்பால் மின்சாரம் குடிநீர் என பல்வேறு வகைகளில் விரைய செலவுகள் நடந்து கொண்டு தான் உள்ளது எனவே விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இதில் இருந்து வெளியேறும் குடிநீர் சாக்கடை நீராக உருவெடுத்து மீண்டும் உள்ளுக்குள் செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News