முக்கண்ணாமலைப்பட்டி செங்குளம் பஸ் ஸ்டாண்டு நூலக கட்டிடத்தில் 15 நாள் இலவச புட்பல்ஸ் தெரப்பி முகாம் இன்று தொடங்கியது. முகாமை ஹாஜி சாகுல்அமீது, டாக்டர் சையது, ஜமாத் செயலாளர் அபிபுல்லா, காதர், லயன் சங்க தலைவர் சாதிக்பாட்சா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாம் ஜனவரி 4ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.