ஆம்பூரில் பாலாற்றில் நுரை பொங்கி வரும் தண்ணீர்
ஆம்பூரில் பாலாற்றில் கழிவு நீர் கலந்து நுரை பொங்கி வரும் தண்ணீர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பாலாற்றில் நுரை பொங்கி ஓடும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிப்புக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தர்ணா போராட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது இந்த தொழிற்சாலியில் இருந்து வெளியேறும் தோல் கழிவு நீர்கள் தேக்கி வைத்திருந்து மழைக்காலங்களில் பாலாற்றில் கலந்து விடுகின்றனர் இதனால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து விளைநிலங்களில் விளைச்சல் குன்றி பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் இந்நிலையில் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பாலாற்றில் நுரை பொங்கி ஓடும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் பாலாறு அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது என உணர்த்தும் வகையில் பாலாறு பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்..