திருப்பத்தூர் ஹோலி கிராஸ் கலைக் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா
திருப்பத்தூர் தனியார் பெண்கள் கலைக் கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தனியார் மகளிர் கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா-திரளாக பங்கேற்ற மாணவிகள்* திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சி ஊராட்சி மொளகரம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா கல்லூரி செயலாளர் ஜுலி செல்வ சுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவிகள் தயார் செய்திருந்த பாரம்பரிய சிறுதானிய உணவுகளான சாமை, வரகு, கம்பு, திணை, பாசி பருப்பு, குதிரை வாலி அரிசி, உள்ளிட்ட உணவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கல்லுரி மாணவிகளிடம் சிறப்புரை ஆற்றினார். இந்த உணவு திருவிழாவில் சிறந்த உணவு வகைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் நாட்டு நலப்பணி அலுவலர் சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் ஜெயசீலன், கல்லூரி துணை முதல்வர் வெங்கடேசன் மற்றும் கல்லூரி மாணவிகள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.