கிருஷ்ணகிரி: பேஞ்சல் புயல் நிவாரண குறித்து அமைச்சர்கள் ஆய்வு கூட்டம்.
கிருஷ்ணகிரி: பேஞ்சல் புயல் நிவாரண குறித்து அமைச்சர்கள் ஆய்வு கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில், நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒசூர் ஒய்.பிரகாஷ், மற்றும் பர்கூர் தே.மதியழகன் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.