சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை

சக்தி மசாலா நிறுவனத்தின் சக்திதேவி அறக்கட்டளை மூலம் இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் 15 மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்

Update: 2024-12-22 08:59 GMT
சக்தி மசாலா நிறுவனத்தின் சக்திதேவி அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2023-2024 ம் கல்வி ஆண்டு இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற 15 மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு நான்கு வருட படிப்பிற்கான கல்வி கட்டணம் முழுவதும் வழங்க ஒப்புக்கொண்டு அதன்படி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்விக் கட்டணங்களாக ரூ. 9,39,00 செலுத்தியுள்ளது. நடப்பு 2024-2025-ம் கல்வி ஆண்டில் முதலாமாண்டு இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் 17 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணம் வழங்கும் நிகழ்ச்சி கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் என்.வெங்கடேச பழனிசாமி வரவேற்றார். துணைவேந்தர் டாக்டர் வி. கீதாலட்சுமி தலைமை தாங்கினார். கௌமார மடம் குமரகுரு சுவாமிகள் கலந்து கொண்டு பேசினார் .சக்திமசாலா நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் டாக்டர் பி.சி. துரைசாமி, டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான கல்வி கட்டணம் ரூ.5,32,100 கான வரைவோலையை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். உதவித்தொகை பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.ஜி. கவிதா நன்றினார். விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்கலைகழக அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Similar News