குமரி மாவட்டம் அருமனை அருகே முழுக்கோடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (49). இவரும் இவர நண்பர் ரவி என்பவரும் கடந்த 19ஆம் தேதி கூலி வேலைக்காக காலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்ததில் பைக்குடன் இருவரும் விழுந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும், காலை நேரம் என்பதாலும் அப்பகுதியில் யாரும் வரவில்லை. பின்னர் அப்பகுதியாக பைக்கில் சென்ற ஒரு நபர் கண்டு உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கனகராஜ் இன்று (22- ம் தேதி) உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அருனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.