சாலையில் சிரிப்பாய்ந்த காளைகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே பெரிய கண்ணனூா் கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.;

Update: 2024-12-23 00:56 GMT
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே பெரிய கண்ணனூா் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெரிய மாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 36 ஜோடி மாடுகள் பங்கேற்றன. சின்ன மாடு பிரிவில் 28 ஜோடி மாடுகள், மாடு பிரிவில் 8 மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாட்டுக்கு 5 கி.மீ. தொலைவும் எல்லைகளாக நிா்ணயம் செய்யப்பட்டிருந்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. சாலையில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையாா்கோவில், கல்லத்தி, பெரியகண்ணனூா், முடிக்கரை சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

Similar News