வேளாண் விரிவாக்க மைய கட்டடம் திறப்பு

திறப்பு;

Update: 2024-12-23 05:04 GMT
நாகலுார் ஊராட்சியில் ரூ. 39 லட்சம் மதிப்பில் வேளாண் விரிவாக்க மைய கட்டடம் திறப்பு விழா நடந்தது. தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள நாகலுார் ஊராட்சியில் வேளாண் விரிவாக்க மைய கட்டடம் கட்டுவதற்கு ரூ. 39 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது.பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். துணை சேர்மன் நெடுஞ்செழியன், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், அட்மா குழு தலைவர் அண்ணாதுரை, வேளாண் உதவி இயக்குனர் வனிதா, ஊராட்சி மன்ற தலைவர் உஷா, முன்னிலை வகித்தனர். தி.மு.க., நிர்வாகிகள் எத்திராஜ், சாமிதுரை, கணேசன், துணை தலைவர் அருள், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News