அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆலோசனை

ஆலோசனை;

Update: 2024-12-23 05:13 GMT
கள்ளக்குறிச்சியில் அயோடின் குறைபாடுகளை போக்கிட அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய அயோடின் குறைபாடுகள் தடுப்பு திட்ட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ராஜா, விழுப்புரம் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன், கள்ளக்குறிச்சி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை துணை ஆணையர் முரளி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன், சி.இ.ஓ., கார்த்திகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி, தமிழ்நாடு மகளிர் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், நுகர்வோர் சங்க பிரதிநிதி அருண்கென்னடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Similar News