பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் ஆய்வு கூட்டம்

கூட்டம்;

Update: 2024-12-23 05:18 GMT
கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மூலம் மட்டுமே ஓய்வூதிய முன்மொழிவுகள் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட முன்மொழிவுகளை இ.எஸ்ஆர்(பணிப்பதிவேடு) அனுப்பி வைத்திட வேண்டும். மேலும், மின் கட்டண பட்டியல்கள் நேரடியாக மின் வாரியத்திற்கே தொகை செலுத்த வசதிகள் ஏற்படுத்துள்ளது. ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை வருமான வரி பிடித்தம் செய்த தொகையை முறையாக 24கியூ மற்றும் 26கியூ அட்டவணையில் உரிய நேரத்தில் இணையதளத்தில் ஏற்பளிப்பு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Similar News