திருவேங்கடத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம்;

Update: 2024-12-23 06:35 GMT
இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தை அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் அவமதிப்பு செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் காந்தி மண்டபம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் திருவேங்கடம் நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் கனியமுதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல முரசுதமிழப்பன். செயலாளர் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கவளவன், தென்காசி டாஸ்மார்க் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் முருகன், சிபிஎம் வழக்கறிஞர் ராகவன், வழக்கறிஞர் ஜெயக்குமார், சிவராமன், சங்கரன்கோவில் நகர செயலாளர் திருமாசுந்தர், சங்கைபிரேம், சத்திரப்பட்டி கிளைச் செயலாளர் ரவிகுமார், சங்குபட்டி கிளை பொருளாளர் பாலமுருகன், மணிராஜ் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.

Similar News