திருப்பத்தூர் அருகே ஆசையாக வளர்த்த நாயை தலை மீது வெட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார்
திருப்பத்தூர் அருகே ஆசையாக வளர்த்த நாயை தலை மீது வெட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார்;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆசையாக வளர்த்த நாயை தலை மீது வெட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது இந்த குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை குறித்து மனு கொடுத்தனர் இந்நிலையில் திருப்பத்தூர் அடுத்த புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் தேவன் மனைவி மூதாட்டி பாப்பா இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரின் பாதுகாப்பிற்காக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தனது நாயை அழைத்துக் கொண்டு நிலத்திற்கு செல்லும் போது அதே பகுதியில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வரும் திம்மராயன் மகன் தீபக் என்பவரின் கடையருகே நாய் சென்றபோது வெட்டுக் கத்தியால் தலை மீதும் உடல் மீதும் வெட்டியுள்ளார். இதில் நாய்க்கு மண்டை பிளவு ஏற்பட்டு உடம்பின் மீதும் காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி பாப்பா இது குறித்து தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த தீபத்தின் உறவினரான தகாத வார்த்தைகளால் திட்டி மூதாட்டி பாப்பாவை கழுத்தை நெரிக்க வந்து அடியாட்களுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் செய்வதறியாமல் படுகாயம் அடைந்த நாயை கால்நடை மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர். ஆனாலும் மருத்துவர்கள் பிழைப்பது கடினம் என கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மூதாட்டி பாப்பா மாவட்ட ஆட்சியரிடம் ஆசையாக வளர்த்த நாயைவெட்டுக் கத்தியால் வெட்டியும் தட்டி கேட்ட எண்ணெய் கொலை மிரட்டல் விடுத்தும், தனியாக இருந்த எனக்கு பாதுகாப்பாக இருந்த நாயை கொலை வெறி தாக்குதலுடன் துன்புறுத்தி எண்ணையும் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். படுகாயம் அடைந்த நாயுடன் மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இறுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு அகர்பத்தி நல வாரியத்தில் புதிய 10 உறுப்பினர் சேர்க்கை அட்டியை ஆட்சியர் பயனளிகளுக்கு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது