வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுப்பட்ட இளைஞர் கைது..

வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுப்பட்ட இளைஞர் கைது..;

Update: 2024-12-23 09:18 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுப்பட்ட இளைஞர் கைது.. அவரிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல், வாணியம்பாடி நகர காவல்துறையினர் நடவடிக்கை.. திருப்பத்தூர் மாவட்டம்.. வாணியம்பாடியில் உள்ள முனீஸ்வரன் ஆலயம் அருகே, வாணியம்பாடி நகர காவல்துறையினர், வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டதில், அந்த இளைஞர், வாணியம்பாடி, பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ஜெய் சூர்யா என்பதும் இவர் வாணியம்பாடி நகர் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது, உடனடியாக ஜெய் சூர்யாவை காவல்துறையினர் கைது செய்து,இளைஞரிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, இளைஞர் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்..

Similar News