திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடு!
கொராட்டி பகுதியில் கூலி தொழிலாளி வீட்டில் திருட்டு கந்திலி போலீசார் விசாரணை!;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 1 சவரன் தங்க நகை (LED) டிவி, 7000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை போலீசார் விசாரணை தனியாக இருக்கும் நபரின் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கும்பல். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செல்லரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (55) இவரது கணவர் இறந்த நிலையில் இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 20 ஆம் தேதி திருப்பூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று மீண்டும் நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ஒரு சவரன் தங்க நகை மற்றும் வீட்டில் பொறுத்திருந்து எல்.ஈ.டி ( LED) டிவி, 7000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுகுறித்து கந்திலி காவல் நிலையத்தில் மனோன்மணி புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..