அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை
அமித் ஷாவுக்கு எதிராக மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் சார்பில் குடியரசு தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் வாயிலாக, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
:- அம்பேத்கர் குறித்து பேசுவது தற்போது பேஷனாகிவிட்டது என மத்திய அமைச்சர் அமித் ஷா அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அம்பேத்கர் குறித்து அவமரியாதையாகவும், இழிவாகவும் கருத்து கூறியதாக மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மீது குற்றம் சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வாயிலாக மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மனு அளித்து வலியுறுத்தினர். இதில் மாவட்ட முன்னாள் தலைவர் பண்ணை சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.