இருசக்கர வாகன பிரச்சாரம் மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.

மாவட்ட அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் தொடர்பான இருசக்கர வாகன பிரச்சாரத்தின் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.

Update: 2024-12-23 18:14 GMT
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 2024-2025ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் தொடர்பான இருசக்கர வாகன பிரச்சாரத்தின் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உடனிருந்தார். மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் 2024-2025ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் தொடர்பான இருசக்கர வாகன பேரணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஶ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்து, பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கோலப்போட்டியினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பா.பொன்னம்பலம், உதவி திட்ட அலுவலர், அனிதா போஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News