சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பாராட்டு, பரிசு

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்

Update: 2024-12-23 18:08 GMT
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சிறந்த பால் உற்பத்தியாளர்களை பாராட்டி இன்று (23.12.2024) பரிசுகளை வழங்கினார். மேலும், வடபாதி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் (டி.என்.டி.208) தேசிய அளவில் சிறந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய கோபால் ரத்னா விருது பெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் தசிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களிடம் இன்று (23.12.2024) காண்பித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டம். 2023-24-ல் பால்வளத்துறையின் மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்களால் தரமான பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறந்த பால் உற்பத்தியாளராகள். சிறந்த தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க செயலாளர்கள் மற்றும் சிறந்த தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கான விருது (Best Producers Award), சிறந்த தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க செயலாளர்களுக்கான விருது (Best MPCS Secretary), சிறந்த தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கான விருது (Best BMC Secretary) என்ற மூன்று பிரிவுகளில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.5,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.3,000 ஒவ்வொரு பிரிவிற்கும் மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவில் வழங்கிட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாவட்ட அளவில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் சிறந்த பால் உற்பத்தியாளர்கள் 3 நபர்கள், சிறந்த சங்க செயலாளர்கள் 3 நபர்கள் மற்றும் சிறந்த தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்கள் 3 நபர்கள் என தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கும் இன்றைய தினம் ரொக்க பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் அருணகிரிநாதன். உதவி பொது மேலாளர் சுப்பிரமணி, மேலாளர் மனிமாறன். பிரேம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News