நூறு ஏரி திட்டம் கிடையாது 82 ஏரி திட்டம் இது - சேலம் திமுக எம்பி டி எம் எஸ்
எடப்பாடி அருகே கண்ணந்தேரி விவசாயிகளை சந்திப்பு கூட்டத்தில் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் கண்ணந்தேரி,ஏகப்புரத்திலும் கொங்கணாபுரம் ஒன்றியத்தில் கொல்லப்பட்டி,வெள்ளாளபுரத்திலும் விவசாயிகளை சந்திக்கும் பொதுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி கலந்துகொண்டு பேசினர். முன்னாள் அமைச்சரும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி விவசாயி மத்தியில் பேசுகையில்... இப்பகுதிகளில் வறண்ட நிலமாக இருந்த காலம் கிட்டத்தட்ட திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னாலே தான் 683 கோடி மதிப்பீட்டில் 82 ஏரிக்கு நீரேற்றும் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் ஒரு ஏரிக்கு கூட நீர் ஏற்றப்படவில்லை ஆகவே இன்றைக்கும் சொல்கிறேன் அன்று இருந்தவர்கள் ஒரு பைப்பை எடுத்து மோட்டார் வைத்து தண்ணீர் கொடுத்ததாக பாவலா செய்துவிட்டு போய்விட்டார்கள். ஆகவே இந்தத் திட்டத்தை ஏ டூ இசட் செய்து கொடுத்தது திமுக ஆட்சி தான் ஆரம்பத்தில் இருந்து படிப்படியாக 50 ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளது என்றார் இது நூறு ஏரி திட்டம் கிடையாது 82 ஏரி மட்டும்தான் இந்தத் திட்டம் இதுவரை 50 ஏரிக்கு தண்ணீர் கொடுத்துள்ளோம் இன்னும் 32 ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் அதற்கு நிலம் கையகப்படுத்த வேண்டும் நிதி ஒதுக்க வேண்டி உள்ளது இதை விட்டுவிட்டு இந்தத் திட்டத்தை நாங்களே செய்ய வேண்டும் என கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றுவது முழு பூசணிக்காயை சோத்த மறைப்பது போல் உள்ளது என பேசினார். அதனைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று மூன்றை ஆண்டு காலத்தில் இந்த 82 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தில் அரசு தேவையான நிதிகளை ஒதுக்கி இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசு உயர் அதிகாரிகளை நியமித்து அறிவுறுத்தப்பட்டு 70% பணிகள் நிறைவடைந்து விவசாயிகள் பயன்படுத்துவதற்கு வந்துள்ளது அதேபோல் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு அவசர காலத்தில் செய்துவிட்டு சென்று விட்டார்கள் அதற்குப் பிறகு நம்மளுடைய முதலமைச்சர் இதனை எப்படியாவது பெற்றுத் தர வேண்டும் என முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் மேலும் திமுக ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை விவசாயிகளிடையே எடுத்துரைத்தார் அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து கொல்லப்பட்டி கண்ணந்தேரி ஏரிகளை பார்வையிட்டார் அப்போது மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, கோட்டாட்சியர், கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.