கிருஷ்ணகிரி அருகே அஷ்டமியை ஒட்டி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி அருகே அஷ்டமியை ஒட்டி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. கணபதி ஹோமம், காலபைரவ மகா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை காண்பிக்கபட்டு பின்னர் சுவாமிக்கு தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல் 12 மணிக்கு, பரணி தீபம் ஏற்றபட்டது. இதில் திரளான பெண்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.