தமிழ்நாடு அரசு HD செட்டாப்பாக்ஸ் சேவை
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாகத்தின் சார்பில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள HD செட்டாப்பாக்ஸ் சேவையினை பொதுமக்கள் பயன்டுத்திக்கொண்டு பயன்பெறலாம் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாகத்தின் சார்பில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள HD செட்டாப்பாக்ஸ் சேவையினை பொதுமக்களுக்கு வழங்கிடும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு HD செட்டாப்பாக்ஸ்களை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கி தொடங்கி வைத்தார். ஒரு புதிய HD செட்டாப்பாக்ஸ் விலை ரூ.500/-எனவும், தற்போது நடைமுறையிலுள்ள மாதாந்திர கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதால் பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன செட்டாப்பாக்ஸ்களை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி துணை மேலாளர் / தனி வட்டாட்சியர் சிவசம்போ உட்பட பலர் கலந்து கொண்டனர்.