கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்களின் பண்டிகை இல்லை, அனைவருக்குமான பண்டிகை
விருத்தாசலம் ஆற்காடு லுத்திரன் திருச்சபையின் போதகர் மறைதிரு. தியாப்பிலஸ் வினோத்குமார்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை டிசம்பர் மாதம் 25ம் தேதி, உலகமெங்கும் வாழ்கிற கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடுகின்றனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்களின் பண்டிகை இல்லை, என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று பார்த்தால், அது மிகவும் குறைவு. கிறிஸ்து பிறந்த செய்தியை சொல்ல வந்த தேவதூதர்கள் சொல்லும் போது, பரிசுத்த பைபில் சொல்லுகிறது. "இதோ, எல்லா ஜனத்திற்கும் சந்தோஷம் தருகின்ற நற்செய்தி" என கூறுகின்றார், ஏனென்றால், கிறிஸ்து ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட வர்கத்தாருக்கோ, இனத்தாருக்கோ, சொந்தாமானவர் இல்லை என்பதை அவர் பிறப்பிலேயே அறிவிக்கப்பட்டது. பரிசுத்த பையில் கடவுள் சொல்கிறது என்னவென்றால், "அவன் என் பெயரை அறிந்திருக்கின்ற படியால் அவனை உயர்ந்த பாதுகாப்பில், உயர்நிலையில் வைப்பேன்" என்பது. அதற்கு அவர் பெயரை அறிந்தவர்கள் எல்லோருக்கும் தங்கள் நிலையில் இருந்து உயர்வும் பாதுகாப்பும் கொடுக்கின்றவர் இயேசு கிறிஸ்து என்பதே பொருள். எனவே உயர்வும் பாதுகாப்பும் பெற கிறிஸ்தவராயிருக்க வேண்டாம், வேறு தகுதிகள் வேண்டாம் அவர் பெயரை அறிந்தால் போதும் என்கிய போது அவர் பிறந்த நாளை எல்லோரும் கொண்டாடலாமே! அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! இவ்வாறு விருத்தாசலம் ஆற்காடு லுத்திரன் திருச்சபையின் போதகர் மறைதிரு. தியாப்பிலஸ் வினோத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்