மணப்பாறையில் அடுத்தடுத்த 9 கடைகளில் திருட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அடுத்தடுத்த 9 கடைகளின் பூட்டுகளை உடைத்து மா்மநபா்கள் பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது

Update: 2024-12-24 12:07 GMT
மணப்பாறை பூங்கா சாலையில் அமைந்துள்ள மண்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளை திங்கள்கிழமை காலை திறக்கவந்த உரிமையாளா்கள், கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தனா். ஞாயிற்றுக்கிழமை இரவு கடைகளின் பூட்டுகளை உடைத்து கல்லாப் பெட்டி, பீரோக்களை உடைத்து செந்தில்குமாா் என்பவருக்கு சொந்தமான பாக்கு தட்டு மண்டியில் ரூ. 12 ஆயிரம் ரொக்கமும், விநாயகம் என்பவரின் மளிகை கடையிலிருந்து ரூ. 20 ஆயிரம் ரொக்கமும், மண்டி கடையிலிருந்து ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடி சென்றுள்ளனா். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற மணப்பாறை போலீஸாா், அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்தனா். தொடா்ந்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணா்களை கொண்டு தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனா்.

Similar News